(எம் .எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரிலோ அல்லது புனர்வாழ்வளித்தோ உடனடியாக  விடுதலை செய்ய வேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அவர்களின் நிலைமை இன்னும் விளங்கவில்லையா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார். தமிழர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசி எந்தப்பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று நடைப்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச்செல்லல் சட்டமூலம் மற்றும் குடியியல் வான்செலவு சட்ட விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.