அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீராங்கனை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான  சீலியா பாச்க்குயின் அரோஸம் என்ற கோல்ஃப் வீராங்கனையே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமேஸ் பகுதியிலுள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றில் சீலியாவின் கோல்ஃப் சாதனங்கள் தனித்து விடப்பட்டிருப்பதைக் கண்ட சக விளையாட்டு வீர வீராங்கனைகள் யாருடையது என தேடி பார்க்கும் போது சீலியா உயிரற்ற நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சீலியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி  வைத்துள்ளனர்.

சீலியாவை கொடூரமாக தாக்கி கொலை செய்யுதுள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவிக்கின்றனர்.

இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையார் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.