வவுனியா மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் மூன்று காரணங்களை முன்வைத்து இன்று பகல் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 வவுனியா புதிய பஸ் நிலையத்தினுள் வெளிமாவட்ட பஸ்கள் உட்செல்வதினை தடை செய்ய வேண்டும், 

 புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக வெளிமாவட்ட பஸ்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதை தடை செய்ய   வேண்டும், 

 இணைந்த நேர அட்டவணையினை உடனே அமுல்படுத்த வேண்டும்  

என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவிலிருந்து வெளிமாகாணங்களுக்கு செல்லும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் தலமையிலான குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக பஸ்களை தரித்து நிற்பதற்கும் தற்காலிக தடை விதித்து அவ்விடத்தில் பொலிஸார் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பஸ்ஸின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேலதிகமாக வெளிமாவட்டங்களிலிருந்து பஸ்களை பெற்று சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இ.போ.சபையின் இணைந்த தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்