(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கொலை செய்து  ஆட்சியினை கைப்பற்ற சூழ்ச்சி செய்பவர்கள் யார் என்ற விடயத்தை  அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என  ராவண பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தானந்த சுதத தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தலைவரின்   உயிருக்கு ஆபத்து காணப்படுகின்றது என்று குறிப்பிடும் பொழுது  சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு காணப்படுகின்றது என்ற சந்தேகம் தோன்றுகின்றது எனவும் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.