சென்னையில் பொலிஸ் சார்பில் கண்காணிப்பு கமெரா பூட்டுவது தொடர்பில் விழிப்புணர்வு குறும்படம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் குற்றங்களை தடுக்கவும் குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யவும் கண்காணிப்பு கமெராக்கள் பொலிஸாருக்கு பெரிதும் உதவி வருகின்றன.

இவ் விடயம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஒகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடிகர் விவேக் நடிப்பில் “மூன்றாவது கண்”  குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் மூன்றாவது கண் விழிப்பணர்வு குறும்படத்தின் இரண்டாவது பகுதி வெளியீட்டு விழா பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இக் குறும்படத்தில் நடித்த நடிகர் விக்ரம் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.