கலவரத்தை ஏற்படுத்தி கட்சியை வளர்க்க ஹெச் ராஜா முயற்சிக்கிறார் என்று தினகரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘தமிழகத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல்களில் இரண்டாம் இடத்திற்கு தான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போடுவார்கள். நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தவறு இல்லையா? பொலிஸார் அமைதி காக்க வேண்டும்? மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி, பிரித்தாளும் சூழ்ச்சியில் பா.ஜ.க.வினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். கலவரத்தை ஏற்படுத்தி கட்சியை வளர்க்க பா.ஜ.க.வினர் முயல்கின்றனர்.’ என்றார்.