கிளிநொச்சியில் வீட்டிற்கருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் திடீரென மயங்கி கீழே விழுந்து மரணித்துள்ளான்.

மேலும், அச்சிறுவனிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுவனை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இவர், கிளிநொச்சி செல்வாநகரில் வசிக்கும் 8 வயதுடைய சத்தியசீலன் மதுசன் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையெனவும் ஆரம்பத்தில் குறித்த சிறுவன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவரெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.