ராதா மோகன் இயக்கத்தில், ஜோதிகாவின் நடிப்பில் தயாரான காற்றின் மொழி படத்தின் டீஸர் செப்டம்பர் 20 ஆம் திகதியன்று வெளியாகிறது.

தமிழகத்தின் கலாச்சார மங்கை என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் நடிகை ஜோதிகாவின் நடிப்பில் தயாராகியிருக்கிறது காற்றின் மொழி. 

இந்த படத்தை மொழி என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ராதா மோகன் இயக்கியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீஸர் 20 ஆம் திகதியன்று வெளியாகிறது.

36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து கதையின் நாயகியாக ஜோதிகா நடித்திருக்கும் படம் காற்றின் மொழி. இந்தியில் வெளியான துமாரி சுலு என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இருந்தாலும், இந்த படத்தில் ரசிகர்களை கவரும் குறிப்பாக ஜோதிகாவின் குடும்ப ரசிகர்களை கவரும் ஜிமிக்கி கம்மல்.. நாட்டியம் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. 

இதனிடையே ஜோதிகா மணிரத்னத்தின் இயக்கத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக நடித்த செக்கச் சிவந்த வானம் என்ற படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.