இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்தியா, டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரதமர் மோடியின் பிறந்தநாளை 568 கிலோ லட்டை வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க., வினர் உற்சாகமாக கொண்டாடினர். 
பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். மோடியின்பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெருமாள் பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக பா.ஜ.க.,வினர் மோதிரம் அணிவித்து பரிசுகளும் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.