ஏறாவூர் பகுதியில் கணபதி கிராமத்தைச் சேர்ந்த காந்தலிங்கம் உதயகுமார் (வயது 48) என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக தன் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர் ஒரு கட்டடத் தொழிலாளி என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது சடலம் பிரேத  பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.