நெல்லுக்கான தீர்வை விலையை 50 ரூபாவாக அதிகரிக்காமலும், உரமானியத்தை முறையாக வழங்காமலும் விவாசாயிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதையிட்டு விவசாயிகள் அதிருப்பதி அடைந்துள்ளனர்.

அதனால் தற்போது மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஜே.வி.பி. தலைமையில் கொழும்பின் பிரதான 6 மார்க்கங்களை மறைத்து ஆர்பாட்டம் செய்து கொழும்பு நகரை ஸதம்பிதமடையச் செய்வோம் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் லால்காந்த தெரிவித்தார்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.