தமிழமுதம் மாபெரும் தமிழ் விழா யாழில் 

Published By: Digital Desk 4

17 Sep, 2018 | 11:59 PM
image

நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்துகின்ற தமிழமுதம் - மாபெரும் தமிழ் விழா நேற்று யாழில் நடைபெற்றது

தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக் கொணரும் வகையில் கலாசார ஊர்வலம் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் இருந்து ஆரம்பித்து பல்கலைக்கழக மருத்துவ பீட மைதானத்தைச் சென்றடைந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ஜக்சன் லீமா தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஈழத் தமிழர் விடுதலையில் பேரவாக் கொண்ட ஓவியர் எனப் புகழப்படும் தமிழக ஓவியர் புகழேந்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். 

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன், பல்கலைக்கழக அதிகாரிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்வுகள் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக...

2024-10-05 16:37:54
news-image

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை...

2024-10-05 17:32:49
news-image

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு...

2024-10-05 17:24:31
news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37