மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான இலங்கையில் கண்டியில் நேற்று நடைபெற்றது.
இலங்கையின் கல்வி அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்த நிகழ்வு கண்டி பொல்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் தமிழ்நாடு சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகரும் இயக்குநருமான கே.பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, தேனிசைத் தென்றல் தேவா, குணச்சித்ர நடிகர் சரவணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ், தலைமையில் எம்.ஜீ.ஆர் தொடர்பான சிறப்பு பட்டிமன்றமும், எம்.ஜீ.ஆரின் விவரண படமும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மேலும், இந்த நூற்றாண்டு விழாவின் சிறப்பு நூல் வெளியீடும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
அத்தோடு, இரவு தேனிசை தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும், இந்திய நடிகர்களுக்கும் அவர்கள் செய்த சேவையை பாராட்டி எம்.ஜீ.ஆர் விருது வழங்கலும் இடம்பெற்றதோடு, ஏனைய கலந்து கொண்ட அதிதிகளுக்கும் எம்.ஜீ.ஆர் விருது வழங்கப்பட்டது.
இந்திய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப்பட்டு விருது வழங்கியமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM