புத்தளம் பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது குறித்த யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் - கியுள பிரதேசத்தில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும், ஊர்காவற்படை ஊழியர்களும் காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட போது, யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், ஊர் காவற்படை ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்திற்குள் நுழைந்த காட்டுயானைகளை விரட்டியடிக்க முற்பட்ட போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புத்தளம் - கருவளகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான தென்னகோன் முதியான்சலாகே நிமல் ரஞ்சித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்தோடு யானைத் தாக்கி படுகாயமடைந்த ஊர் காவற்படை ஊழியர் சிகிச்சை பெற்று வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.