இலங்கை மின்சார சபை வழங்க வேண்டியுள்ள கடனை இரண்டு மாத காலத்திற்குள் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு நிதி செலுத்தாத விவகாரம் தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 15 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இலங்கை மின்சார சபையை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் உற்பத்தி, மின் விநியோகம் என்பவற்றுக்காக வருடாந்தம் மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு நிதி செலுத்த வேண்டும்.

ஆனால், மின்சார சபை கடந்த 2018ஆ ம் ஆண்டு, 19 கோடியே 20 இலட்சத்து 600 ரூபாய் வரிப்பணத்தை செலுத்த தவறியுள்ளதாக கூறியே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த கடன் தொகையை இரண்டு மாத காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டுமென நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.