வடமாகாண பொதுச்சேவையின் கீழ் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான அரச ஊழியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் றெஜினோல்ட் கூரே தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 134 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இதன்படி 42 சாரதிகளுக்கும், 73 அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களுக்கும், மகளிர் விவகார அமைச்சின் கீழ் 19 பேருக்கும் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநரின் செயலாளர்  இளங்கோவன் மற்றும் வட மாகாண அமைச்சின் செயலாளர்கள். அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.