முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 91 வது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் தலைவர் நவாலியூர் க.கௌரிகாந்தன் தலைமையில் இன்றுமாலை 4.30மணியளவில் யாழ். பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா (முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), சிறப்பு விருந்தினராக தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட் தலைவர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்), கௌரவ விருந்தினராக அ.வரதராஜப்பெருமாள் (முன்னாள் முதலமைச்சர் வடக்கு கிழக்கு மாகாணசபை) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சுகிர்தன் ஆகியோரும், நடராஜா (பனம்பொருள் அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்) ராஜேந்திரம் (மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர்), மகேஸ்வரி ஆகியோருடன் அ.அமிர்தலிங்கம் வாழ்ந்த காலத்தில் அவரோடு நெருக்கமாக பழகியவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வின்போது வடமாகாணம் முழுவதிலுமான பாடசாலைகளில் நடைபெற்ற அ.அமிர்தலிங்கம் பற்றிய பேச்சுப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றோருக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. நன்றியுரையினை அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையைச் சேர்ந்த தங்கமுகுந்தன் ஆற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM