இறக்குமதி செய்யப்படும் புடவை மீது விதிக்கப்பட்ட வற் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் புடவை வகைகளுக்கு அறவிடப்படும் வற் வரி குறைப்பு நாளை செவ்வாய்க்கிழமை முதல் அமுல்ப்படுத்தப்படும் என நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி இதுவரை விதிக்கப்பட்டு வந்த 15 வீதத்திலிருந்து 5 வீதமாக குறைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.