பிரபலம் மிக்க Glaxo Smith Kline (ஜி.எஸ்.கே) வர்த்தக நாமங்களான பனடோல் மற்றும் அயோடெக்ஸ் பாராட்டத்தக்க விதமாக மிஹிந்தலை மற்றும் கதிர்காமத்தில் ‘சுவ சஹன’ முயற்சியை அண்மையில் முன்னெடுத்திருந்தன.

வலி மக்களின் வாழ்க்கைப் பாதையைத் தடைசெய்ய இடமளிப்பதில்லையென்ற என்ற உறுதிமொழியைக் கொண்ட வர்த்தக நாமங்களாக பனடோல் மற்றும் அயோடெக்ஸ் விளங்கும் நிலையில், ஜிஎஸ்கே இன் சுவ சஹன முனைப்பானது மிஹிந்தலை மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் கலாசார, மதஸ்தலங்களுக்குச் செல்லுவோருக்கு தொடர்ச்சியாக ஒன்பதாவது வருடமும் உதவியளித்துள்ளது.

ஜிஎஸ்கே சுவ சஹன நிகழ்ச்சித்திட்டமானது ஜுன் மாதம் 26 ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை மிஹிந்தலை தொல்பொருளியல் நூதனசாலைக்கு அருகிலும் ஜுலை 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கதிர்காமத்தில் கிரி விகாரைக்கும் கோவிலுக்கும் இடையிலான பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வலியால் பாதிக்கப்பட்ட பக்தர்களின் பாதங்கள் மற்றும் தலைகளுக்கு மசாஜ் வழங்குவது மற்றும் சிகிச்சை ரீதியான அனுபவங்கள் மூலம் இந்த நிவாரண முனைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக, சுவ சஹன நிலையத்தில் மருந்தாளர்களால் பனடோல் இலவசமாகப் பரிந்துரைக்கப்பட்டது. 

இங்கு ‘அயோடெக்ஸ் பாம்’ மற்றும் ‘அயோடெக்ஸ் ஹெட்ன்பாஸ்ட்’ போன்றவற்றின் இலவச மாதிரிகளும் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் சுவ சஹன நிலையத்தை உண்மையான வலி நிவாரண மற்றும் முதலுதவி வலயமாக மாற்றியிருந்ததுடன், புனித யாத்திரையில் உதவி தேவைப்பட்ட அனைவரும் இலகுவில் நாடக்கூடிய இடமாகவும் அமைந்தது.

பாராட்டத்தக்க சுவ சஹன முனைப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த SmithKline Beecham Sri Lanka நிறுவனத்தின் தலைவர்ஃமுகாமைத்துவப் பணிப்பாளரான சுனில் மெஹ்ரா:

“நீண்டகாலமாக இலங்கையர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள பனடோல் மற்றும் அயோடெக்ஸ் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. 

மதரீதியான யாத்திரைகள் மற்றும் ஆன்மீக செயற்பாடுகள் தேசிய ரீதியில் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சுவ சஹன வலி நிவாரண வலயத்தின் ஊடாக மீண்டும் ஒருமுறை பக்தர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாம் முன்வந்தோம். 

எமது சமூகத்துக்கு ஏதாவது ஒன்றை மீள ஒப்படைத்தல் என்ற எமது அடிப்படை கொள்கைக்கு இந்த முயற்சி முக்கியமானது” என்றார்.

பிரபலம் மிக்க வர்த்தக நாமங்களான அயோடெக்ஸ் மற்றும் பனடோலின் GlaxoSmithKline சுவ சஹன திட்டத்தினால் வருடாந்தம் மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சிறப்புமிக்க இந்த சமூக சேவைத் திட்டத்தினால் கிடைத்த பலன்களைக் கருத்தில் கொண்டு சுவ சஹன திட்டம் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவதுடன் எதிர்காலத்திலும் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் ஜிஎஸ்கே எதிர்பார்த்துள்ளது.