போதைப்பொருள் நடவடிக்கை குறித்து முறைப்பாடு வழங்க பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விசேட பொலிஸ் பிரிவானது நாளை முதல் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது.

மேலும் போதைப்பொருள் பாவனை, போதைப் பொருள் கடத்தல் போன்ற போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் பொது மக்கள், 0113024803/ 0113024815/0113024820/0113024848/0113024850 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு தெரிவிக்க முடியுமென பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.