இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஒருவர் தன்னைப் பார்த்து ஒசாமா பின்லேடன் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

 

மொயீன் அலியினுடைய சுயசரிதையின் ஒரு சில பாகங்கள் "த டைம்ஸ்" பத்திரிகையில் வெளிவருகின்றன. 

அந்த சுயசரிதை பாகங்களிலேயே மொயீன் அலி இதனை தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மைதானத்தில் ஒரு அவுஸ்திரேலிய வீரர் என்னை பார்த்து "டேக் தட் ஒசாமா" (ஒசாமா பின்­லேடன்) என அழைத்தார் என கூறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந் நிலையில் இது சம்பந்தமாக விசாரணை நடத்தப் போவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.