ஆசியாவின் முன்னணி சுற்றுலா சிறப்பான செயலுக்காக உலக பயண விருது இலங்கைக்கு கிடைத்ததன் மூலம் சிறப்பானதொரு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. 

2018 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியாக வழங்கப்படும் உலக பயண விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. 

25 ஆவது பதிப்பான சர்வதேச தரத்துடனான அங்கீகாரத்தின் மூலம் இலங்கை ஆசியாவின் சிறப்பியல்பினை கொண்ட முன்னணி சுற்றுலா தலத்திற்கான இந்த விருதினை பெற்றுள்ளது. 

அண்மையில் ஹொங்கொங்கில் உள்ள இன்ரகொண்டினன்ரல் கிராண்ட் ஸ்ரன் போட் விருந்தகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும், இடம்பெறும் இந்த உலக பயண விருது, பிராந்தியத்தின் புவியியல் பிராந்தியத்தின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வெற்றியை அங்கீகரிக்கும் செயல்பாடாக அமைந்துள்ளது. 

இந்த வருடத்திற்கான ஆசிய மற்றும் அவுஸ்திரேலிய தொடர்பான பாரிய நிகழ்வு ஹொங்கொங்கில் உள்ள இன்ரகொண்டினன்ரல் கிராண்ட் ஸ்ரன் போட் விருந்தகத்தில் கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பிரபலங்கள், மற்றும் சர்வதேச ரீதியாக புதிதாக தொழில்துறைக்கு வந்தவர்களும் வருகை தந்திருந்தனர்.

இந்த நிகழ்வின் போது இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு “ஆசியாவின் முன்னணி சாதனை சுற்றுலா இலக்கு 2018” விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் திஹான் செனீவரட்ன மற்றும் பணியகத்தை சேர்ந்த நிகழ்வு இயக்குனர் பிரசாத் தலுவத்த ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

உலக பயண விருதுகள், ஆசியா மற்றும் ஒஸ்ரலேஷியா பிரமாண்ட நிகழ்வு 2018, இல் மிகவும் மதிப்பு மிக்க சுற்றுலா மற்றும் சுற்றுலா நிகழ்வுகளை மையமாக கொண்டதுடன் ஆசியா மற்றும் ஒஸ்ரலேஷியாவை சேர்ந்த முன்னணி பிரமுகர்கள் மற்றும் சிறப்பு முக்கியஸ்தர்களை நிகழ்வில் உள்வாங்கப்பட்டனர்.

இந்த விருதிற்கான வாக்குகள் உலகளாவிய ரீதியான பயண மற்றும் சுற்றுலா தொழில்துறையினர், வர்த்தகர்கள் ஒய்வு பயண முகவர்கள் ஆகியோரினால் பதிவு செய்யப்பட்டது. 

இந்த விருதினை பெறுபவர்கள் கடந்த 12 மாதங்களில் சிறந்த அமைப்பு என்பதுடன் உயர் மட்ட அர்ப்பணிப்பினை அங்கீகரிக்கின்றது. பாரிய உலக பயண விருது 2018 இன் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் அன்று மாலை இடம்பெற்றதுடன் 25 ஆவது வருடாந்தர சர்வதேச விருந்தோம்பல் துறையினை பிரதிபலிப்பதாக அமைந்தது. 

இந்த பாரிய நிகழ்வில் உத்தியோகபூர்வமாக வெற்றியாளர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கான விருது வழங்கப்பட்டதுடன்ரூபவ் படப்பிடிப்புடனான ஊடகவியலாளர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றன.

சிவப்பு கம்பள வரவேற்புடனான இனிய மாலை நிகழ்வில் வியட்நாமும் உள்ளடங்கியது. கடுமையான போட்டிக்கு மத்தியில் “ஆசியாவின் முன்னணி இலக்கு விருதை பெற்றது” 

அதேவேளை, மரபு வழக்கமான பாணியை ஒட்டிய நகர அமைப்பு மற்றும் அழகிய கடற்கரைகளைக் கொண்ட சிட்னிக்கு “ஒஸ்ரலேஷியாவின் முன்னணி இலக்கு” என பெயரிடப்பட்டது.

ஹொங்கொங்கில் நம்பமுடியான சிறந்த மாலைப்பொழுதை வழங்கியதாக உலக பயண விருதின் நிறுவினரும் தலைவருமான கிரஹாம் குக் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

எமக்கு பல சிறந்த முன்னணி விருந்தகங்களை, விமான சேவைகளை மற்றும் ஆசிய மற்றும் ஒஸ்ரலேஷியாவை சேர்ந்த விருந்தோம்பல் வழங்குனர்கள் மற்றும் சிறப்பான சுற்றுலா பிரதேசங்களை வழங்கியவர்களுக்கு தமது நன்றியை தெரிவித்தார். 

இது தவிர சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பாரிய உலக பயண விருது சுற்றுலாத்துறையின் சிறந்த வலைப்பின்னலாக வாய்ப்பினை சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு வழங்குவதாக  கருதப்படுகிறது. இந்த நிகழ்வில் அரச அரச மற்றும் சுற்றுலா தொழில் சார் தலைவர்கள்ரூபவ் அறிவு மேதைகள் மற்றும் சர்வதேச அச்சு மற்றும் ஒலிபரப்பு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

உலகளாவிய ரிதியாக நற்மதிப்பை பெற்ற இந்த விருது கிடைக்கப்பெற்றமைக்கான முழு பொறுப்பும் அங்கீகாரமும் பணியகத்தை சேர்ந்த பணியாளர்களுக்கே உரித்தாக வேண்டும் என தெரிவித்தார். அவர்களின் கடினமான உழைப்பு இலங்கையினை சிறந்த சுற்றுலாத் தலமாக அடையாளப் படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.