பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் ஹொங்கோங் அணி பகிஸ்தான் அணியின் பந்து வீச்சுக்களுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 37.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 116 ஓடத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியான பாகிஸ்தான் மற்றும் ஹொங்கோங் அணிகளுக்கிடையிலான போட்டி டுபாயில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஹொங்கோங் அணியின்  தலைவர் அனுஸ்மன் ராத் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதன்படி ஹொங்கொங் அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக் காரர்களாக நிஜாக்கத் கான் மற்றும் அணித் தலைவர் அனுஸ்மன் ராத் ஆகியோர் களமிங்கினர்.

இவர்கள் இருவரது ஜோடி 4.3 ஓவர்களுக்கு மாத்திரமே தாக்குப் பிடித்தது. அதன்பின்னர் நிஜாக்கத் கான் 13 ஒட்டத்துடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து பாபர் ஹயத் களமிங்கி ஆடிவர அணியின் ஓட்ட எண்ணிக்கை 32 ஆக இருக்கும்போது அனுஸ்மன் ராத் 19 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிறிஸ்டோபர் கார்ட்டரும் 2 ஓட்டத்துடன் ஹசன் அலியுடைய பந்தில் ஆட்டமிழக்க இதையடுத்து பாபர் ஹயத்தும் 7 ஓட்டத்துடன் ஷெர்தாப் கானின் சுழலில் சிக்கி வெளியேறினார். அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கானும் வந்த வேகத்திலேயே இரண்டு பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஷெர்தாப் கானின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதற்கிணங்க ஹெங்கொங் அணி 16.3 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறி ஆடி வந்தது.

அடுகளத்தில் கின்சித் ஷா மற்றும் அலிஸ் கான் ஆகியோரும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து  நிதானமாக ஆடி வர அணியின் ஓட்ட எண்ணிக்கை சற்று அதிகரித்தது. அதன்படி இந்த ஜோடி 73 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கை 95 ஆக இருந்தது.

எனினும் 30.2 ஆவது ஓவரில் அணி 97 ஓட்டங்கள‍ை பெற்றிருக்கும் போது அலிஸ் கான் உஷ்மான் கானினுடைய பந்து வீச்சில் 27 ஓட்த்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்தடுத்து வந்த ஸ்காட் மெக்கெச்சினி, தன்வீர் அப்சல் எதுவித ஓட்டத்தையும் பெறாது உஷ்மான் கானுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக ஹொங்கொங் அணி 37.1 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 116 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு வெற்றியிலக்காக 117 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் உஷ்மான் கான் 7.3 ஓவர்களுக்க மூன்று விக்கெட்டுக்களையும், ஷெர்தாப் கானின் மற்று ஹசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் அஷ்ரப் 4 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.