காவத்தை, வேகங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக காவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் 40 வயதுடையவர் ஆவார்.

வேகங்கை நுகவெல பிரதேசத்தில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் சடலத்தை கண்டு காவத்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, காவத்தை பொலிஸார் சம்பவம் இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.