களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு பொதுநூலகம், சிறியதொரு கட்டடத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வருவதனால் மாணவர்களும் வாசகர்களும் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 

இதனால் மாணவர்களின் தேசியமட்ட தேர்ச்சிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கல்வி ஆணைக்குழுவின் விதப்புரைகளுக்கமைவாக மேற்கொள்ளப்படும் கலைத்திட்ட மறுசீரமைப்பு பாடத்திட்டங்களுக்கமைவான ஆசிரியர் வழிகாட்டி, பாடப் புத்தகங்கள், ஆக்க இலக்கியப் படைப்புகள் மற்றும் இதர புத்தகங்கள் இன்மையினால் மாணவர்கள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் புத்தக அலுமாரி, இறாக்கை, மேசை, கதிரை போன்ற பெளதீக வளங்கள் இன்மையினால் இருக்கின்ற நூல்கள்,உசாத்துணைப் புத்தகங்கள் நிலத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை இலகுவாக எடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பாடசாலை மாணவர்களும் வாசகர்களும் சுட்டிக்கட்டியுள்ளனர்.