இருவவேறு பகுதிகளில் நான்கு கைக்குண்டுகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதன்படி மாவத்தகம, மற்றும் கொழும்பு, கோட்டைப் பகுதியில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக மாவத்தகம பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு கைக்குண்டுகளுடன் வீட்டின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் கொழும்பு, கோட்டைப் பகுதியில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள் இரண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.