விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவு அஞ்சலி

By T Yuwaraj

16 Sep, 2018 | 10:37 AM
image

போரின் போது விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மக்களின் 19 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பிரதேச மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

1999 ஆம் ஆண்டு விமான குண்டு வீச்சின் போது முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்திரி பகுதியில் கொல்லப்பட்ட 25 பொதுமக்களுக்கே இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு உறவினர்களினால் மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்