இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான ஒப்பந்த காலத்தை மேலும் 6 மாதத்துக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சூழலியல் பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டன. 

பின்னர் அது தொடர்பான முறையான மற்றும் முழுமையான சூழல் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையின் பிரகாரம் சில நிபந்தனைகளின் அடிப்படையிலும், திருத்தி கொள்ள வேண்டிய அம்சங்களுக்கிணங்கவும் மீள ஆரம்பிக்க பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை நிலையியல் குழுவின் சிபார்சு செய்துள்ளது. 

அதனடிப்படையில் குறித்த குறித்த கம்பனிக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் மேலும் ஆறு மாதத்துக்கு நீடிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.