இலங்கைக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், நீண்ட நாட்களுக்கு பின்னர் களம்புகுந்த மலிங்க அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும், ரஹிமின் துணையுடன் பங்களாதேஷ் 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்காக 262 ஓட்டங்களை நிர்ணயித்ததுள்ளது.

டுபாய் சர்தேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் பங்காளாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் மற்றும் லிட்டான் தாஸ் ஆகியோருக்கு, ஓய்விலிருந்து திரும்பி வந்த மலிங்கவின் பந்துக்கு முகங்கொடுக் முடியாது போனது.

அதன்படி மலிங்கவின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் லிட்டான் தாஸ் எதுவித ஓட்டத்தையும் பெறது டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஷகிப் அல் ஹசனும் பசித்திருந்த சிங்கத்தின் (மலிங்கவின் ) வேட்டையில் சிக்கினார்.

அதன்படி ஷகிப் அல் ஹசன் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எதுவித ஓட்டமுமின்றி  கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து சுரங்கா லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்டார். அந்த பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியில் துடித்த அவர் ஓட்டத்துடன் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டு வெளியேறினார்.

இதனையடத்து ஜோடி சேர்ந்த ரஹிம் மற்றும் மொஹமட் மிதுன் இருவரும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்களை நிதானமாக எதிர்கொண்டு அணியின் ஓட்டத்தை அதிகரிக்க ஆரம்பித்தனர். 

ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் அணி 25.3 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் பறிகொடுத்து வலுவான நிலையில் 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இருப்பினும் ஐந்து நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஆட்டங்களை பெற்று அரை சதத்தை கடந்து 63 ஓட்டங்களுடன் ஆடி வந்த மிதுன் மலிங்கவின் வேட்டையில் சிக்கி குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த மஹ்மதுல்லாவும் ஒரு ஓட்டத்துடன் அபோன்சோவுடைய பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய ஹுசேனும் மலிங்கவினுடைய பந்து வீச்சில் குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களம்புகுந்த மெஹீடி ஹசன் 21 பந்துகளை எதிர்கொண்டு 15 ஓட்டங்களுடன் லக்மலிலன் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார்.

அதையடுத்து களம்புகுந்தார் அணித் தலைவர் மொஸ்ரபி மோர்டாசா, பங்களாதேஷ் அணியின் ஓட்ட எண்ணிக்கை தனஞ்சய டிசில்வாவின் பந்து வீச்சினை எதிர்கொண்டு ஆடிய மொஸ்ரபி மோர்டாசாவும் 11 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க ஹசேனும் 2 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து இலங்கை  அணியின் பந்துக்களுக்கு தாக்குப் பிடித்து ஆடிவந்த ரஹிம் 97 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 43.3 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச சதத்தை பூர்த்தி செய்தார். அதன்படி அவர் 123 பந்துகளுக்கு ஏழு நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 101 ஓட்டங்களை பெற்று துடுப்பாடி வந்தார்.  

அடுத்த படியாக பங்களாதேஷ் அணி 46.5 ஓவர்களுக்கு 229 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரஹுமானும் 10 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, உபாதை காரணமாக ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டு வெளியேறிய தமிம் இக்பால் மீண்டும் களமிறங்கி ஒரு கையை மாத்திரம் பயன்படுத்தி துடுப்பெடுத்தாடி வந்தார். 

இதையடுத்து இறுதி தருணங்களில் அதிரடியை காட்ட ஆரம்பித்த ரஹிம் 48 ஆவது ஓவரில் மாத்திரம் 15 ஓட்டங்களை விளாசினார், தொடர்ந்தும் அதிரடி காட்டி வந்த அவர் 150 பந்துகளை எதிர்கொண்டு 144 ஓட்டங்களை பெற்று திஸர பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 262 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 10 ஓவர்களுக்கு 23 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 7 ஓவர்களுக்க 38 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களையும் அபோன்சோ, திஸர பெரேரா மற்றும் சுரங்க லக்மால் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.