சிலருக்கு அதிகமாகப் பசிக்கும். நிறைய உட்கொள்ள மீண்டும் பசிக்கும். மீண்டும் உட்கொள்ள விரும்புவர். இது குறித்து வைத்தியரிடம் சென்று விசாரித்தால் இரைப்பை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பார்கள் அல்லது இரைப்பையில் புண் ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.

அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற குடிநீர் ஆகியவற்றில் helocobacter pylori என்ற பாக்டீரியா தொற்று இருக்கும். இது குடிநீரின் வழியாக உடலுக்குள் சென்று இரைப்பையில் புண்ணை ஏற்படுத்தும். மது அருந்துவது, புகைப் பிடிப்பது, காரம் நிறைந்த உணவையும், புளிப்பு சுவையுள்ள உணவையும் அதிகமாக உட்கொள்வது, குளிர்பானங்கள், கோப்பி, தேத்தண்ணீர் போன்றவற்றை அதிகளவில் அருந்துவது, அதிகளவில் தொடர்ச்சியாக வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்ற பல காரணங்களால் இரைப்பையில் புண் ஏற்படக்கூடும்.

அமிலச்சுரப்பு அதிகமாக இருப்பதாலேயே இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக அண்மையில் கண்டறியப்பட்டிருக்கிறது. இத்தகைய பாதிப்பு வந்தவுடன் கேஸ்ட்ரோ எண்டாஸ்கோப்பி என்ற பரிசோதனையை மேற்கொள்வார்கள்.

இதன் மூலம் இரைப்பையில் புண்ணை ஏற்படுத்திய helocobacter pylori என்ற கிருமிகளை எதிர்த்து போராடும் கிருமி நாசினிகளின் எண்ணிக்கையும் கண்டறிவார்கள். பிறகு அதற்கேற்ற வகையில் சிகிச்சையளித்து இதனை குணப்படுத்துவார்கள்.

பிறகு மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றவேண்டும். அப்போது தான் இதனை மீண்டும் வராமல் தற்காத்துக் கொள்ள இயலும்.