ஆசிய கிண்ணத்திற்கான முதல் போட்டியில் இலங்கை பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ள அதேவேளை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசால் பெரேரா இலங்கை அணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு அணியாக நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம், எங்களை நாங்கள் சிறந்த முறையில் தயார்படுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் ஒவ்வொரு போட்டியாக அணுகுகின்றோம் பங்களாதேஷிற்கு எதிரான இன்றைய போட்டியில் தீவிரமாக விளையாடிப்பார்க்கவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.