(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றாது தப்பிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. காரணம் இரண்டு தடவைகள் இலங்கை அரசாங்கம் தானாக இணை அனுசரணை வழங்கியுள்ளது. 

எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

தற்போது அரசாங்கம் தேர்தல்களிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக அரசியல் தீர்வு கேள்விக்குறியாக்கப்படுமா? ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.