முப்படைகளின் பிரதானியை கைதுசெய்வதற்கான நோக்கம் எதுவுமில்லை என அரச தகவல்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுதர்சன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

டெய்லி நியுசிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணரட்ன மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெறுவதற்கான முயற்சிகள் மாத்திரம் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகளின் பிரதானி கைதுசெய்யப்படவுள்ளார் என செய்திகளை வெளியிடுவதன் மூலம் ஊடகங்கள் தற்போதைய அரசாங்கம்  யுத்தவீரர்களை வேட்டையாடுகின்றது என்ற எதிர்கட்சிகளின் கூற்றினை பலப்படுத்துகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.