நிலவிற்கு சுற்றுலா செல்லும் புதிய திட்டத்தை அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்,

"விண்வெளியில் பயணிக்கும் சராசரி மனிதர்களின் கனவை நனவாக்கும் வகையில் அவர்களை நிலவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

இத் திட்டத்திற்காக எங்களது அதி சக்தி வாங்ய்ந்த பிக் ஃபால்கன் ஏவுகணை பயன்படுத்தப்படும்" என டுவிட்டியுள்ளது.