கிழக்கு மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினரகளையும் சந்தித்தார்.

இவ் விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்து ஆளுனரைச் சந்தித்து அபிவிருத்திச்செயல்திட்டங்கள் உட்பட இருதரப்பு விடயங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் பற்றி கலந்துரையாடினார். 

குறித்த இச்சந்திப்பின் போது இந்திய உயர் ஸ்தானிகர்  எதிர்கட்சித் தலைவருடன் திருக்கோணேஸ்வரம் கோவிலிற்கும் சென்று ஆசீர்வாதங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.