(ரொபட் அன்டனி)

வெகுவிரைவில் புதிய அரசியலமைப்பின் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக கடந்த பாராளுமன்ற அமர்வில்  அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை. அவ்வாறு அரசியலமைப்பின் வரைபை விரைவில்  சபையில் சமர்ப்பிப்பது தொடர்பில்  பிரதான வழிநடத்தல் குழுவில் ஆராயப்படவில்லை என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். 

இன்று நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றது.ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை அதிகரிக்கிறது. மக்கள் பாரிய  சுமையை  சுமந்துகொண்டிருக்கின்றனர் என்றும்  தினேஷ் குணவர்த்த  குறிப்பிட்டார். 

வெகுவிரைவில் புதிய அரசியலமைப்பின் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என  அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.