‘அறம் ’ இயக்குநரின் அடுத்த படம்

Published By: R. Kalaichelvan

14 Sep, 2018 | 06:26 PM
image

நயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கிய இயக்குநர் கோபி நாயனார் அடுத்ததாக ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார்.இது குறித்து இயக்குநர் கோபி நாயனார் பேசுகையில்,‘ தமிழ்நாட்டிற்கு பிழைப்பிற்காக வட இந்தியா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், இங்குள்ள பூர்வ குடிகளை எப்படி தொடர்ந்து நசுக்குகிறார்கள். தமிழ் மொழியும், தமிழனும் எப்படி தங்களது அடையாளத்தை இழந்து வருகிறது என்பதை விவரிக்கிறேன். இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தில் கதையின் நாயகனாக ஒரு விளையாட்டு வீரனாக நடிகர் ஜெய் நடிக்கிறார். கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 

படபிடிப்பு சென்னையிலும், அதன் சுற்றுப்புறப்பகுதியிலும் நடைபெறவிருக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, பிரசாத் இசையமைக்கிறார்.’ என்றார்.

இந்த படம் கருப்பர் நகரம் என்ற பெயரில் வெளியான நாவலைத்தழுவி எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்