ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிண்டலடிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதியின் மகனும் பாராளுமன்ற உறுப்பினறுமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி ஹம்பந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விவசாயிகளின் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட முந்திரிப்பருப்புக்கள் நாய் கூட உண்ணத்தகுதியற்றவை இதையெல்லாம் அனுமதிப்பது யார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜனாதிபதியின் இக் கருத்தின் பின்னர் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் கொள்வனவு செய்த முந்திரிப்பருப்புக்களை நீக்கிவிட்டதோடு முந்திரிபருப்பு கொள்வனவிற்காக டுபாய் நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு வேறு ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிவித்தது.

இந் நிலையிலேயே நாமல் ராஜபக்ஷ தனது நண்பருடன் விமானத்திலிருந்து தனது கையில் முந்திரிபருப்புக்களை வைத்துக்கொண்டும் தனது நண்பர் முந்திரி பருப்பை உண்பது போலவும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் அப்புகைப்படத்தின் மேல் முந்திரயை பற்றி சொல்வதற்கு ஒன்றுமல்லை இது ஒரு முக்கியமில்லாத விடயம் என்ற அர்த்தத்தை தரும் வகையில் “நதிங் ஹியர் டு கோ நட்ஸ் எபவ்ட்” என டுவிட்டியுள்ளார்.