பௌத்த தேரருக்கு கடூழிய சிறை வழங்கியுள்ளமை பௌத்த மதக்கோட்பாடுகளுக்கு முரணானது - பொதுபலசேனா

Published By: Daya

14 Sep, 2018 | 04:50 PM
image

  நீதிமன்றத்திற்கு கல்லெறிந்து சட்டத்துறையினை அவமதித்த  அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தொடர்பில் இதுவரையில் அரசாங்கமோ, நீதித்துறையோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 

ஆனால் இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுத்த பௌத்த தேரருக்கு கடூழிய சிறை தண்டவை வழங்கியுள்ளமையானது பௌத்த மத கோட்பாடுகளுக்கு முரணானதாகும் பொதுபல சேனா அமைப்பின் பேச்சாளர் சுதினாநந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

 நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம்சாட்டி ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளமையானது சட்டத்தின் பார்வையில்  ஏற்றுக்கொள்ள கூடியதாக காணப்பட்டாலும்,  பொதுவான விடயங்களின் பார்வையில் முரணானதாகவே காணப்படுகின்றது.  

நீதிமன்றத்தினை அவமதித்தவர்கள் இன்று அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புக்களில் காணப்படுகின்றனர். 

நீதிமன்றத்திற்கு கல்லெறிந்து சட்டத்துறையினை அவமதித்த  அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  தொடர்பில் இதுவரையில் அரசாங்கமோ, நீதித்துறையோ எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. 

ஆனால் இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுத்த பௌத்த தேரருகு கடூழிய சிறை தண்டவை வழங்கியுள்ளமையானது பௌத்த மத கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.

தேசிய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் பௌத்த மதம் முற்றாக அழியும் நிலையில் காணப்படுகின்றது. சர்வதேசத்தின் சில  ஒரு தலைப்பட்சமான நோக்கங்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் இன்று முகவர்களாக செயற்படுகின்றனர்.  

இதன் ஒரு கட்டமே ஞானசார தேரரின்  சிறைவாசம் . வடக்கிற்கு ஒரு  சட்டவொழுங்கும் தெற்கில் பிறிதொரு சட்டவொழுங்கும் பின்பற்றப்படுகின்றது. 

பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47