கிழக்கு மாகாணத்திற்கான இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைககான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை  சந்தித்து உரையாடினார்.

பாசிக்குடாவிலுள்ள ஹோட்டலொன்றில் இடம் பெற்ற இந்த சந்திப்பில்  இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர்  கே. துரைராஜசிங்கம் , பாராளுமன்ற உறுப்பினர்களான  ஜி. சிறிநேசன் , சா. வியாழேந்திரன் , க.கோடிஸ்வரன்  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கோ. கருணாகரம் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.