பிரான்சின் தென்பகுதியில் காரால் பொதுமக்களை மோதித்தள்ள முயன்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை மதுபானசாலைக்கு அருகில் அதிகமாக காணப்பட்ட பொதுமக்கள் மீது  குறிப்பிட்ட நபர் காரால் மோதியதாக சம்பவ இடத்தில் காணப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பிட்ட நபர் அல்லாகு அக்பர் என கோசமிட்டார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கார் தாக்குதல் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

காரால் பொதுமக்களை மோதிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

கார்தாக்குதலிற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை எனினும்  இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.