அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக மேலும் தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு அல் –கொய்தா தீவி­ர­வாத குழுவின் தலைவர் அய்மான் அல்  ஸவாஹ்ரி அந்தத் தீவி­ர­வாத குழுவின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

அமெ­ரிக்க இரட்டைக் கோபு­ரங்கள் மீதான 9/11தாக்­குதல்  ஞாப­கார்த்த தினத்­தை­யொட்டி வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய காணொளிக் காட்­சி­யி­லேயே  அவர் இவ்­வாறு அழைப்பு விடுத்­துள்ளார்.

இஸ்­லாத்தின் மத ரீதி­யான எதி­ரி­யாக அமெ­ரிக்கா உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர்,  உல­க­மெங்­கு­முள்ள முஸ்­லிம்கள்  அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக போரை பிர­க­டனம் செய்ய வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

அவர் அந்த 30  நிமிட காணொளிக் காட்­சியில் நேர­டி­யாக காணொளிப்படக் கரு­வியை நோக்­கி­ய­வாறு உரை­யாற்­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இஸ்­ரே­லிய தூத­ர­கத்தை டெல் அவிவ் நக­ரி­லி­ருந்து ஜெரு­சலேம் நக­ருக்கு இட­மாற்­று­வ­தற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள தீர்மானம்  அமெரிக்கா மீது மேலும் தாக்குதல்களை நடத்துவதை நியாயஸ்தம் செய்வதாகவுள்ளதாக ஸவாஹ்ரி கூறினார்.

அல் – கொய்தா  தீவிரவாத குழுவின் தலைவர் ஒஸாமா பின்லேடன் 2011 ஆம் ஆண்டு அமெரிக்க விசேட படையினரால் கொல்லப்பட்டதையடுத்து அந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பை அல் ஸவாஹ்ரி ஏற்றார்.

இந்நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள காணொளிக்காட்சியில்  அல் ஸவாஹ்ரி,  முஸ்லிம்களின் முதலாவது எதிரியாக அமெரிக்கா  உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.