2019  உலக கிண்ணத்திற்கு தயாராவதற்கான கால அவகாசத்தை விராட்கோலிக்கு வழங்குவதற்காகவே நான் தலைமைத்துவத்திலிருந்து விலகினேன் என டோனி தெரிவித்துள்ளார்.

2019 உலக கிண்ணப்போட்டிகளிற்கு கோலி தயாராவதற்கான போதிய கால அவகாசத்தை வழங்கவேண்டும் என நான் கருதினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தலைவரை தெரிவு செய்யாமல் வலுவான அணியை உருவாக்க முடியாது எனவும் டோனி தெரிவித்துள்ளார்.

உரிய தருணத்தில் நான் தலைமையிலிருந்து விலகினேன் என கருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தமைக்கு போதிய பயிற்சியாட்டங்களில் பங்கெடுக்காமையே காரணம் எனவும் டோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பயிற்சியாட்டங்களில் விளையாடவில்லை இதன் காரணமாகவே துடுப்பாட்ட வீரர்களால் இங்கிலாந்து அணியின் சூழலிற்கு ஏற்ப மாறமுடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இதன் காரணமாக இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.