ஆசியக் கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் தனுஸ்க குணதிலக்க விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் குணதிலக்க உபாதை காரணமாகவே ஆசிக் கிண்ணத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

டுபாய் சென்றுள்ள இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்த தனுஷ்க குணதிலக அங்கிருந்து சிகிச்சைகளுக்காக மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார்.

இலங்கை அணியின் ஆசிக் கிண்ண குழாமில் தனுஷ்க குணதிலக்கவுக்கு பதிலாக சேஹான் ஜயசூரிய உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.