நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்துவருகின்ற நிறுவனமான சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி மற்றும் ஐரோப்பாவில் முன்னணியில் திகழும் வீட்டுப் பாவனை சாதனங்கள் மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் உற்பத்திகள் வர்த்தகநாமமான BEKO ஆகியவற்றின் அனுசரணையில் உலகில் முன்னிலை வகிக்கும் உதைபந்தாட்டக் கழகத்தின் ஆட்டத்தை வார இறுதியில் நேரில் கண்டுகளிப்பதற்கு பிரயாணம் செய்யும் வாய்ப்பை மூன்று அதிர்ஷ்டசாலி ஜோடிகளுக்கும், கிளை முகாமைத்துவத்தில் BEKO விற்பனையில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் வழங்கியுள்ளன.

நாடளாவியரீதியில், தெரிவுசெய்யப்பட்ட சிங்கர் காட்சியறைகளில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற விசேட BEKO ஊக்குவிப்பின் நிறைவில் இடம்பெற்ற மாபெரும் அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டிழுப்பின் மூலமாக மூன்று அதிர்ஷ்டசாலி ஜோடிகள் தெரிவுசெய்யப்பட்டனர். 

இந்த வெற்றியாளர்கள் லயனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் லூயிஸ் சுவாரிஸ் போன்ற சர்வதேச உதைபந்தாட்ட நட்சத்திரங்களைக் கொண்ட உலகின் பிரபலமான ஸ்பானிய உதைபந்தாட்டக் கழகமான FC Barcelona கழகத்தின் நேரடி ஆட்டத்தை ஸ்பெயின் பார்சிலோனா நகரிலுள்ள பிரபலமான Camp Nou அரங்கத்தில் கண்டுகளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 

பார்சிலோனா நகரிற்கான இரு வழிப் பயண விமான டிக்கட்டுக்கள், நட்சத்திர வகுப்பு தங்குமிட வசதி, போக்குவரத்து மற்றும் வார இறுதியில் இடம்பெறுகின்ற FC Barcelona ஆட்டத்திற்கான நுழைவுச் சீட்டுக்கள் ஆகியன பரிசுகளில் உள்ளடங்கியுள்ளன. 

இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டிழுப்பானது சிங்கர் ஸ்ரீ லங்கா  நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகரிகளால் மேல் மாகாணத்தின் வருமான திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் BEKO மற்றும் FC Barcelona கழகம் ஆகியன தமக்கிடையில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதுடன், இதன் கீழ் சர்வதேச வீட்டுப் பாவனை சாதன உற்பத்தி குழுமம் நான்கு ஆண்டுகளுக்கு கழகத்தின் உலகளாவிலான அனுசரணைப் பங்காளராக மாறியுள்ளது. 

கழகத்தின் தலைமை அணியினர் அனைத்து பருவ காலங்களிலும் ஆடுகின்ற அனைத்து ஸ்பானிய லீக் மற்றும் கிண்ண ஆட்டங்கள் மற்றும் சிநேகபூர்வ மற்றும் கோடை கால சுற்றுலா ஆட்டங்கள் அனைத்தின் போதும் அவர்கள் அணியும் ஷேர்ட்டுக்களின் கைப்பகுதியில் BEKO இன் இலச்சினை பொறிக்கப்பட்டுள்ளமை இந்த பங்குடமையின் அடையாளமாகும்.

BEKO இன் பொதுநலவாய சுதந்திர நாடுகள், அண்டை கிழக்கு மற்றும் இந்தியாவிற்கான சந்தைப்படுத்தல் முகாமையாளரான  சீஹான் சேஹான்  கூறுகையில்,

“தனது 60 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்ற BEKO வர்த்தகநாமம், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஐரோப்பாவில் அதிக வளர்ச்சி வீதத்தை ஈட்டியுள்ள வர்த்தகநாமம் என்ற தரப்படுத்தலை சம்பாதித்துள்ளதுடன், ஐரோப்பாவில் தனித்தியங்கும்   வீட்டுப் பாவனைச் சாதனங்கள் வர்த்தகநாமங்களில் தனது முதலாவது ஸ்தானத்தை தொடர்ந்தும் பேணிவருகின்றது. 

இலங்கையில் BEKO கண்டுவருகின்ற வளர்ச்சியான மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளதுடன், இலங்கையிலுள்ள மிகவும் பாரிய வீட்டுப் பாவனைச் சாதனங்கள் விற்பனை நிறுவனத்துடன் பங்காளராக இணைந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டார். 

இந்நிகழ்வில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சிங்கர் ஸ்ரீ லங்கா  பீஎல்சி நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன,

“சிங்கர் ஸ்ரீ லங்கா மற்றும் BEKO ஆகிய நிறுவனங்களின் தனிச்சிறப்பை வெளிக்காண்பிக்கும் வகையில் தனித்துவமான, அதிசிறந்த அனுபவங்களை இந்த விசேட ஊக்குவிப்பு பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. 

இலங்கை நுகர்வோர்கள் தற்போது தமது விருப்பங்கள் எவை என்பதை விரைவாக இனங்கண்டு அவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை வளர்த்துக்கொண்டுள்ளதால் மிக விரைவாக மாற்றம் கண்டுவருகின்ற நகரப்புறத்து வாழ்க்கை முறைகளுக்கு மிகவும் பொருத்தமான உலகத்தரம் வாய்ந்த வீட்டுப் பாவனை உற்பத்திகளை கொள்வனவு செய்வதில் ஒரு படி மேலே செல்ல எவ்விதமான தயக்கமும் காட்டுவதில்லை. 

சிங்கர் மற்றும் BEKO ஆகியன ஒன்றிணைந்து நவீன இல்லத்திற்குத் தேவையான நவீன BEKO வீட்டுப் பாவனை சாதனங்களை வழங்கி அதன் மூலமாக அதிசிறந்த அனுபவத்தை வழங்க முடிந்துள்ளது.” 

“வெற்றி பெற்றுள்ள மூன்று ஜோடிகளும் வாழ்நாளில் மறக்கமுடியாத வகையில் விநோதத்துடனும், வியப்புடனும் இந்த சுற்றுலாவை அனுபவித்து மகிழ்வர் என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது”

இலங்கையில் சந்தைப்படுத்தப்படுகின்ற BEKO உற்பத்திகளில் குளிர்சாதனப்பெட்டிகள், தனித்தியங்கும் மின்சார மற்றும் வாயு மற்றும் உள்ளிணைப்புச் செய்யப்பட்ட அடுப்புக்கள், சலவை இயந்திரங்கள், உள்ளிணைப்புச் செய்யப்பட்ட முகடுகள் மற்றும் அடுப்பு மாடங்கள், டிஷ்வோஷர்கள் மற்றும் உலர்த்திகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. 

அனைத்து BEKO உற்பத்திகளுக்கும் தொழிற்துறையில் அதிகப்படியான அளவில் 12 ஆண்டு உத்தரவாதம் கிடைக்கப்பெறுகின்றது. 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் BEKO இன் ஏகபோக விநியோகத்தராகவும், அங்கீகரிக்கப்பட்ட பேணற் சேவைப் பங்காளராகவும் சிங்கர் தொழிற்பட்டுவருகின்றது.