இந்தியாவின், பரிதாபாத்தில் இலங்கை மற்றும் இந்திய பொலிஸார் இணைந்து போக்குவரத்து முகாமைத்துவ கூட்டுப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய நிதியுதவியுடன் கடந்த 03 ஆம் திகதி ஆரம்பமான இந்த பயிற்சி நெறியானது நாளை 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சி நெறியில் பிரதான பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் பரிசோதகர், உதவிப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகிய தரங்களிலிருந்து 15 பொலிஸ் அதிகாரிகள் பங்கு பற்றுகின்றனர்.

மேலும் இந்த வருடம் இலங்கைப் பொலிசாருக்கு இந்தியாவில், குற்றச் சம்பவ இடர் முகாமைத்துவம் மற்றும் பகுப்பாய்வு, நீதிமன்றில் குற்றவியல் விளக்கங்களில் நிபுணத்துவ சாட்சியமளித்தல், தடயவியல் விஞ்ஞானம், சைபர் தடயவியல் மற்றும் நிதிசார் குற்றம் தொடர்பான ஒரு கருத்தரங்கு போன்ற ஏனைய பல்வேறு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.