தியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஜனநாயக போராளிகள் கட்சியினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்றுவரும் இச் சூழலில் ஓடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூக விடுதலையினை நேசித்தவர் திலீபன்.
அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உண்ணா விரதமிருந்து, நல்லூர் வீதியில் மூச்சடங்கிப்போனவர் தியாகி திலீபன்.
இன்றுவரை திலீபனின் ஒரு கோரிக்கை கூட நிறைவேறாத நிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபனின் நினைவு நாட்கள் நடைபெறும் இக் காலங்களில் உறவுகள் கேளிக்கை களியாட்டங்களை தவிர்த்து திலீபனின் நினைவுகளை சுமந்து உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்குமாறு தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டி நிற்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாகி திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் கனவு இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM