மகாவலி திட்டத்தின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து வேறு மக்களை கொண்டு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதற்கு எங்களுடைய எதிர்ப்பு தொடர்ச்சியாக இருக்கும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை - திரியாய் அருள்மிகு வரத விக்னேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த பெருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பேரில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுவதை தடுத்து நிறுத்த கோரி அண்மையில் முல்லைத்தீவில் பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறித்து  வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.