(எம்.மனோசித்ரா)
வடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்கும் வகையில் வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வெளியான தவல்களில் உண்மையில்லையெனவும் உண்மைக்கு முரணான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வட மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இடம்பெற்றது.
இதன்போது முல்லைத்தீவு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா என்பதை ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.
இந் நிபுணர்கள் குழுவின் ஆய்வுகள் குடியேற்றங்கள் மற்றும் நிலம் தொடர்பிலான தகவல்களை வட மாகாண சபையின் அதிகாரபூர்வமான ஆவணமாக கருதுவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு கடந்த 30 ஆம் திகதி அனுப்பிவைத்துள்ள கடிதத்தை கருத்தில் கொள்ளலாம் என அரசாங்க தகவல் தினைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM