கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம  ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. 

கீழே விழுந்த போது  சுயநினைவை இழந்த கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர், நேற்று மாலை அவர் இறைபாதம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரின் இறுதிக் கிரியைகள் 13 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டவுள்ளதோடு அன்றையதினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.